Home இலங்கை அரசியல் மட்டக்களப்பு மாவட்டத்தில் 8130 மில்லியன் பெறுமதியான திட்டங்களுக்கு அனுமதி – சுனில் ஹந்துன்னெத்தி

மட்டக்களப்பு மாவட்டத்தில் 8130 மில்லியன் பெறுமதியான திட்டங்களுக்கு அனுமதி – சுனில் ஹந்துன்னெத்தி

0

மட்டக்களப்பு மாவட்டத்தில் 8130 மில்லியன் ரூபா பெறுமதியான 2077
திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட அபிவிருத்தி குழுவின் புதிய
தலைவரும் அமைச்சருமான சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பின் பழைய மாவட்ட செயலக மாநாட்டு
மண்டபத்தில் இன்று(11.06.2025) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, முன்னேற்ற மீளாய்வு செய்யப்பட்டதுடன், மாவட்ட
ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்கான முன்மொழிவுகள்
குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

கூட்டறிக்கைகள் 

விவசாயம், நீர்ப்பாசனம், கல்வி, சுகாதாரம், சுற்றாடல், வீதிகள் பாலங்கள்
அமைத்தல், யானை வேலி அமைத்தல், உரம் வழங்கல், அரச மருந்தகம் அமைத்தல்,
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இடப்பற்றாக்குறை, காணி பிரச்சினைகள்,
மேய்ச்சல்தரை பிரச்சினை, ஆளணியினர் பற்றாக்குறை, குடிநீர் வழங்கல், உட்பட்ட
பல திணைக்களங்கள் சார் விடயங்களும் விரிவாக ஆராயப்பட்டதுடன் அவற்றில்
காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக உரிய
அதிகாரிகளுக்கு பணிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், முக்கியமாக காணப்படும் மக்கள் நலப்பணிகளை தெரிவு செய்து
துரிதகதியில் நிறைவு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

   

இதேவேளை, விவசாய குழு, கைத்தொழில் குழு, போக்குவரத்து குழு, சுற்றாடல் குழு
ஆகிய நான்கு குழுக்களும் மாதாந்தம் கலந்துரையாடி தீர்வுகள் காணப்பட வேண்டும்
என்பதுடன் குறித்த கூட்டறிக்கைகள் மாவட்ட ஒருங்கினைப்பு குழுகூட்டத்தில்
சமர்ப்பிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின்
இணைத்தலைவருமான பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கந்தசாமி பிரபு, எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்,
ஞானமுத்து சிறிநேசன், இராசமாணிக்கம் சாணக்கியன், இளையதம்பி சிறிநாத் மற்றும்
கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ரீ.ஏ.சி.என். தலங்கம ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.  

NO COMMENTS

Exit mobile version