Home இலங்கை சமூகம் மன்னார் காற்றாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்களின் நடைபயணம்

மன்னார் காற்றாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்களின் நடைபயணம்

0

மன்னார் பகுதியில் அமைக்கப்பட உள்ள காற்றாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்காலில் இருந்து இரண்டு இளைஞர்கள் நடைபயணம் மேற்கொண்டுள்ளனர்.

குறித்த நடைப்பயணம் நேற்றையதினம்(10) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் முல்லைத்தீவிலிருந்து கால்நடையாக செல்வதோடு துண்டு பிரசுரங்களை வீதி ஓரங்களில் உள்ள வர்த்தக
நிலையங்கள் மற்றும் பொது மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

கனியமணல் சுரங்கம்

இதன்போது அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில்,

“காற்றாலை அபிவிருத்தி திட்டம் மக்களுக்கானதா? முதலாளிகளுக்கானதா? எமது வளத்தை
அழித்துவிட்டு யாருக்கானது உங்கள் அபிவிருத்தி?, எமது நிலங்களும் எமது
வளங்களும் எமக்கானதே.  

முதலாளிகளின் அடிவருடிகளாக இல்லாது எம்
எதிர்காலத்தையும் சிந்திப்போம். கனியமணல் சுரங்கம் மன்னார் தீவிற்கு மட்டுமல்ல, முழுநாட்டிற்கும் ஆபத்தானது” எனத் தெரிவித்துள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version