முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முல்லைத்தீவில் புதிய அதிபரை நியமிக்குமாறு கோரி போராட்டம்

முல்லைத்தீவு – துணுக்காய்( Mullaitivu- Thunukkai) ஆரோக்கிய புரம் தமிழ் வித்தியாலயத்தில் காணப்படும்
குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருமாறும் தகுதியான அதிபரை நியமிக்குமாறு
கோரியும் குறித்த போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டமானது இன்று மாணவர்களின் பெற்றோர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – துணுக்காய் கல்வி வலயத்தின் கீழ் உள்ள மேற்படி பாடசாலையில் தரம்
ஒன்று முதல் ஐந்து வரையான வகுப்புகளைக் கொண்டு இயங்கி வருகின்றது.

முல்லைத்தீவில் ஆசிரியர் தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதி

முல்லைத்தீவில் ஆசிரியர் தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதி

அடிப்படை வசதிகளின்மை

தரம் 05 மாணவர்களுக்கு கற்பிக்கக்கூடிய தகுதியான ஆசிரியரின்மை
மற்றும் பாடசாலையினுடைய அடிப்படை வசதிகளின்மை என்பவற்றை நிவர்த்தி செய்து தரக்கோரியும் குறித்த பாடசாலைக்கு தகுதி வாய்ந்த அதிபர் ஒருவரை நியமித்து
தருமாறும் கோரியும்  இன்று(03.04.2024) கவனயீர்ப்பு
போராட்டம் ஒன்றை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

protest-demanding-the-appointment-of-principle

இதேவேளை நேற்று முன்தினம் பாடசாலை மாணவர் ஒருவர் ஆசிரியர் ஒருவரால்தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தொடர்பிலும்
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு துணுக்காய் வலயக்கல்வி திணைக்கள அதிகாரிகள்
பெற்றோர்களுடன் கலந்துரையாடி வழங்கிய உறுதி மொழியை அடுத்து
குறித்த போராட்டம் கைவிடப்பட்டு 10 மணிக்கு பாடசாலை மாணவர்களின் கற்றல்
செயல்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கெஹலிய தொடர்பில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கெஹலிய தொடர்பில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

காதலியுடன் சென்ற மாணவன் மாயம்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்

காதலியுடன் சென்ற மாணவன் மாயம்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்