கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்திற்கு முன்னாள் தமது காணிகளை மீட்டுத் தருமாறு கோரி ஆர்ப்பாட்டமொன்று இன்று (03) முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது கிழக்கு மாகாண ஆளுநருக்கு மனுவும் வழங்கி வைக்கப்பட்டது.
அம்மனுவில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது,
மூதூர் பிரதேச செயலாளர்
உயிர் வாழும் உரிமையை உறுதிப்படுத்த சம்பூர் பிரதேசத்தில் இலங்கை அரச பொறிமுறைகளால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களை விடுவித்து ஜீவனோபாயத்தினை முன்னெடுக்க உதவுங்கள்.
இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சம்பூர் மேற்கு, சம்பூர் கிழக்கு மற்றும் கடற்கரைச்சேனை கிராம சேவகர் பிரிவிலுள்ள மக்களாகிய நாங்கள் இன்றைய தினம் ( 04.04.2025)வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்திற்கு முன்னாள் ஜனநாயக முறையில் ஒன்று கூடியுள்ளோம்.
நாங்கள் இலங்கை அரச பொறிமுறைகளால் கையகப்படுத்தப்பட்ட எமக்கு சொந்தமான 1658 ஏக்கர் 04 றூட் 35.38 பேச் அளவுகளைக் கொண்ட எமக்கு சொந்தமான குடியிருப்பு மற்றும் தொழில் ஏக்கர் நிலங்களை முழுமையாக விடுவித்து நாம் வாழ்வதற்காகவும் ஜீவனோபாயத்தினை முன்னெடுக்கவும் உதவுமாறு கிழக்கு மாகாண ஆளுநரை வேண்டுகின்றோம்.
மேலும், ஜனாதிபதி தலைமையின் கீழ், வரலாற்றில் முதல் முறையாக, தேசிய மக்கள் சக்தி அமைத்த அரசாங்கம் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.
இன்று எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள் மற்றும் பிரச்சினைகளுக்கு நீடித்த தீர்வுகளை வழங்க தற்போதைய அரசாங்கம் அதிகாரம் கொண்டுள்ளது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
