Home இலங்கை சமூகம் யாழில் வெடிக்கவுள்ள மாபெரும் போராட்டம்: பெரும் தமிழ் தலைமைகளின் ஆதரவு

யாழில் வெடிக்கவுள்ள மாபெரும் போராட்டம்: பெரும் தமிழ் தலைமைகளின் ஆதரவு

0

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு தமிழ்த்
தேசிய மக்கள் முன்னணின் முழுமையான அதரவு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் (Jaffna) இன்று (29) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தலைமைகளின் ஆதரவு

வடக்கு மற்றும் கிழக்கின் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வடக்கு மற்றும் கிழக்கில் மாபெரும் போராட்டம் இடம்பெறவுள்ளது.

குறித்த போராட்டமானது நாளை (30) திகதி காலை பத்து மணிக்கு யாழ் கிட்டு பூங்கா முன்பாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version