முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் பங்களிப்போடு கல்முனையில் போராட்டம்

கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக அத்துமீறல்கள் மற்றும் கல்முனை தெற்கு பிரதேச செயலக பிரிவின் சட்டவிரோத நடவடிக்கையை மாவட்ட செயலகமும் உள்நாட்டலுவல்கள் அமைச்சும் அனுமதித்து வருகின்ற நிலையில் அவற்றை கண்டித்து 11ஆவது நாளான இன்று பொது மக்களுடன் கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் இணைந்து போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த போராட்டம் சேவை குடியிருப்பு கணேஷ் மகா வித்தியாலய முன்றலில் இருந்து நடைப்பவனியாக ஆரம்பிக்கப்பட்டு பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு கல்முனை வடக்கு பிரதேச செயலக முன்றலை அடைந்தது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான கணக்காளரை நியமி, கல்முனை தெற்கு பிரதேச செயலகத்தினால் பிரயோகிக்கப்படும் அழுத்தங்களை நிறுத்து மற்றும் அமைச்சரவை தீர்மானத்தை நடைமுறைப்படுத்து போன்ற கோஷங்களை எழுப்பியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் பங்களிப்போடு கல்முனையில் போராட்டம் | Protest In Kalmunai

குறித்த போராட்டத்தின்போது யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், செல்வராசா கஜேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், தமிழரசு கட்சி முக்கியஸ்தர் அகிலன் முத்துக்குமாரசுவாமி, தமிழரசு கட்சியின் யாழ். மாவட்ட வாலிபர் முன்னணி செயலாளர் கருணாகரன் குணாளன், தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பிரமுகர் கணேசானந்தம் ஆகியோர் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று இருந்தனர்.

நிரந்தரமான தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என பொதுமக்கள் கூறியதோடு குறித்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்காவிடின் போராட்டம் மேலும் மோசமான நிலைக்கு கொண்டுசெல்லப்படும் என பல்கலைக்கழக மாணவர்கள் அரசியல் தலைமைகளிடம் வலியுறுத்தியுள்ளனர். 

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் பங்களிப்போடு கல்முனையில் போராட்டம் | Protest In Kalmunai

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் பங்களிப்போடு கல்முனையில் போராட்டம் | Protest In Kalmunai

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் பங்களிப்போடு கல்முனையில் போராட்டம் | Protest In Kalmunai

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் பங்களிப்போடு கல்முனையில் போராட்டம் | Protest In Kalmunai

முதலாம் இணைப்பு

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரங்கள் அத்துமீறி பறிக்கப்படுவதற்கும் அநீதிகள் இழைக்கப்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நீதிகோரிய போராட்டம் 11 ஆவது நாளாக இடம்பெற்றுள்ளது.

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் பங்களிப்போடு இன்று ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நற்பிட்டிமுனை அம்பலத்தடி பிள்ளையார் ஆலய முன்றலில் இருந்து பொதுமக்களுடன் இணைந்து நடைபவணியாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் முன்னால் உள்ள போராட்ட இடத்தினை வந்தடைந்தனர்.

நீதிமன்றம் சென்ற தமிழரசுக் கட்சி தொடர்பில் இரகசியம் உடைக்கும் முக்கியஸ்தர்

நீதிமன்றம் சென்ற தமிழரசுக் கட்சி தொடர்பில் இரகசியம் உடைக்கும் முக்கியஸ்தர்

அமைச்சரவை தீர்மானம்

இதன் போது அமைச்சரவை தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்துங்கள் கல்முனை உப பிரதேச அலுவலகமாக கருதி மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத தீர்மானங்கள் அனைத்தையும் இரத்து செய்யுங்கள் காணி நிதி அதிகாரங்களை வழங்குங்கள் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் சுயாதீன தொழிற்பாட்டை உறுதிப்படுத்துங்கள் என பல்வேறு கோஷங்களை முன்வைத்து போராடி வருகின்றனர்.

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் பங்களிப்போடு கல்முனையில் போராட்டம் | Protest In Kalmunai

இப்போராட்டத்திற்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன் செல்வராஜா கஜேந்திரன் உட்பட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கொடீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டிருக்கின்றனர்.

மேலும்,  கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட கிராம மக்கள் நடைபவனியாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதுடன் பொது அமைப்புக்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரிய போராட்டத்துக்கு ஆதரவை வழங்கி வருகின்றனர்.

பிள்ளையான் பலத்துடன் இருந்தார்! பிரித்தானியாவில் இருந்து வருவதற்கு அச்சப்பட்ட அருண்

பிள்ளையான் பலத்துடன் இருந்தார்! பிரித்தானியாவில் இருந்து வருவதற்கு அச்சப்பட்ட அருண்

சனத் நிஷாந்தவின் வீடு எரிக்கப்பட்ட சம்பவம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

சனத் நிஷாந்தவின் வீடு எரிக்கப்பட்ட சம்பவம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்