வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் காணி அபகரிப்பு மற்றும் இந்து ஆலயங்கள் மீதான அடக்குமுறையினைக் கண்டித்து கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது இன்று (2) திருகோணமலை சிவன்கோவிலுக்கு முன்பாக நடைபெற்றுள்ளது.
அத்துமீறல்கள்
இதன்போது “வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம்”, “தமிழர் தொல்பொருளை
சிதைக்காதே”, “சைவமத வழிபாட்டு உரிமையை உறுதிப்படுத்துக”, “கோயில் நிலங்களை
அபகரிக்காதே” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியும் கோசங்களை
எழுப்பியும் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது என்பது இந்த நாட்டின் சாபக்கேடு
நீண்டகாலமாக சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களால் தமிழர்களின் காணி அபகரிப்பு,
சைவத் தமிழரின் தலங்களை அழித்தல், நாடுமுழுவதும் இருக்கும் தமிழர் தொல்லியல்
சின்னங்களை அழித்தல் மற்றும் உருமாற்றம் செய்தல், இந்துக்களின் கோயில்களின்
வழிபாடுகளைத் சட்டத்திற்கு முரணானவகையில் தடுத்தல். ஆலயங்களுக்குச் சொந்தமான
நிலங்களை அபகரித்தல் எனும் அத்துமீறல்கள் தொடர்கதையாகவே செல்கின்றது எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.
