யாழ் (Jaffna) செம்மணியில் மாபெரும் அணையா விளக்கு போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டேர்க், யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ள நிலையில், அவரது கவனத்தை ஈர்க்கும் முகமாக குறித்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஆரம்பக்கட்டமாக கிழக்கில் இன்று (13) போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
குறித்த போராட்டத்திற்கு பொது மக்கள் அணைவரும் கலந்துகொள்ளுமாரு சாணக்கியன் அழைப்பு விடுத்துள்ளதுடன் தமிழ் மக்களுக்களின் பிரச்சினைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டேர்க்கு எடுத்துரைக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுருத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/SzoRdYuuitU
