Home இலங்கை சமூகம் முல்லைத்தீவு பாடசாலையொன்றில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பதற்ற நிலை

முல்லைத்தீவு பாடசாலையொன்றில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பதற்ற நிலை

0

முல்லைத்தீவு – பாண்டியன்குளம் மகா வித்தியாலயத்தில் உடற்கல்வி ஆசிரியரை இடமாற்றம் செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களின் பெற்றோர்களால் போராட்டமொன்று இன்றையதினம்(23) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனால் அங்கு ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்துள்ளனர்.

போராட்டம் 

இந்த பாடசாலையின் கற்றல் கற்பித்தல்களில் காணப்படும் இடர்பாடுகளால் பல மாணவர்கள் பாடசாலையை விட்டு வெளியேறி வேறு பாடசாலைக்கு சென்றுள்ளதாக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், முன்னதாக பாடசாலையில் முறையற்ற நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதில் மாணவர்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் அங்கு வந்த பாடசாலை அதிபர் மாணவர்களை தாக்கியதை அடுத்து பெற்றோருக்கும் பாடசாலை சமூக்திற்கும் முறுகல் நிலை ஏற்பட்டதால் அங்கு ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டடதாக தெரியவந்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version