Home இலங்கை சமூகம் உர மானிய பணத்தில் பாரிய மோசடி…! சபையில் சாடிய அமைச்சர்

உர மானிய பணத்தில் பாரிய மோசடி…! சபையில் சாடிய அமைச்சர்

0

விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உர மானியத்துக்கான பணம் திருடப்பட்டுள்ளமை தற்போது தெரியவந்துள்ளதாக அரச தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. 

அத்துடன் உர மானியத்துக்கான பணத்தை சில விவசாயிகள் பெறவில்லை என்றும் விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன (Namal Karunaratne
) குறிப்பிட்டுள்ளார். 

நாடாளுமன்றத்தில் இன்று (18) நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த குமார நவரட்ண எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே விவசாய பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதிகாரியொருவர் கைது

இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,

அநுராதபுரம் மாவட்டத்தில் மட்டும் 155 விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உர மானியப் பணத்தில் 2,934,310 ரூபா திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நாமல் கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சில விவசாயிகளிடமிருந்து உர மானிய நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.   

NO COMMENTS

Exit mobile version