முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பாடசாலை மாணவிகளுக்கு வழங்கப்படவுள்ள வவுச்சர்: கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு!

பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார துவாய்களை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் புத்தாண்டுக்கு பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக நேற்றையதினம்(26) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“மிகக் கடினமான, தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் மற்றும் வறுமையைக் கொண்ட பாடசாலைகளில் உள்ள சுமார் எட்டு இலட்சம் பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார துவாய்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அமெரிக்க பாலத்தை அசுர வேகத்தில் தகர்த்த கப்பல்! முழு செலவையும் ஏற்ற ஜோ பைடன்

அமெரிக்க பாலத்தை அசுர வேகத்தில் தகர்த்த கப்பல்! முழு செலவையும் ஏற்ற ஜோ பைடன்

மாணவிகளுக்கு சுகாதார துவாய்கள்

அது தொடர்பான அமைச்சரவை பத்திரம் தற்போது ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்காக அரசாங்கத்தினால் செலவிடப்படும் என எதிர்பார்க்கப்படும் நிதி சுமார் ஒரு பில்லியன் ரூபா ஆகும்.

பாடசாலை மாணவிகளுக்கு வழங்கப்படவுள்ள வவுச்சர்: கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு! | Provide Sanitary Napkin Vouchers Schoolgirls Susil

ஒரு வவுச்சர் அட்டை ஒன்றின் பெறுமதி சுமார் 1200 ரூபா எனவும், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பெண் பிள்ளைகளை பலப்படுத்துவதன் மூலம் அவர்களுக்கு ஆதரவளிப்பதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்” என
சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

மதுபோதையில் வந்த ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவர்கள்: வைரலாகும் காணொளி

மதுபோதையில் வந்த ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவர்கள்: வைரலாகும் காணொளி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்