மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் முடிவு
எடுக்கப்படும் என்று, அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் பிரபா ருவான் செனரத் இதனை அறிவித்துள்ளார்.
எல்லை நிர்ணய செயல்முறை போன்ற தீர்க்கப்படாத சட்ட மற்றும் தொழில்நுட்ப
சிக்கல்களே, இதற்கான காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பழைய தேர்தல் முறை
இந்த சவால்கள் போதுமான அளவு தீர்க்கப்பட்டு உள்ளூராட்சி சட்ட கட்டமைப்பு
உறுதிப்படுத்தப்படும் வரை தேர்தல்கள் நடத்தப்படாது என்று பிரதி அமைச்சர்
கூறியுள்ளார்.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா, மாகாண
சபைத் தேர்தலை நடத்துவதற்கான எல்லை நிர்ணய அறிக்கையை சமர்ப்பித்து பின்னர் அதை
நிராகரித்திருந்தார்.
இதன் விளைவாக, அரசாங்கம் இப்போது பழைய தேர்தல் முறைக்குத் திரும்புவதையும்
மாகாண சபைகளை எல்லை நிர்ணயம் செய்வதையும் பரிசீலித்து வருகிறது என்று அவர்
குறிப்பிட்டுள்ளார்.
