இலங்கையில் எதிர்கால பொருளாதாரக் கண்ணோட்டத்தில் பொதுமக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளதை காட்டுவதாக பிரபல வணிக இதழான LMD நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. .
அதன்படி, ஜனவரி மாதம் நடந்த கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 58 சதவீதமானோர் அந்த நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.
அதே நேரத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பு, அந்த நம்பிக்கை 8 சதவீதம் என்ற குறைந்த மட்டத்தில் காணப்பட்டுள்ளது.
பொருளாதார மேம்பாடு
கடந்த டிசம்பரில் LMD பத்திரிகை நடத்திய கணக்கெடுப்பின்படி, பொருளாதாரம் மேம்படும் என்ற நம்பிக்கையின் அளவு 41 சதவீதமாகவே இருந்தது.
டிசம்பர் முதல் ஜனவரி வரை அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையில் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2025 வரவு செலவு திட்டம் அறிக்கை அரசாங்கத்தின் எதிர்கால பொருளாதார திட்டங்கள் குறித்த பொதுமக்களின் கருத்தையும் அது பிரதிபலிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.