Home அமெரிக்கா தரவு மையங்களுக்கு எதிரான மக்களின் எதிர்ப்பு : தேர்தல் வெற்றிக்காகப் பயன்படுத்த முயலும் அமெரிக்க ஜனநாயகக்...

தரவு மையங்களுக்கு எதிரான மக்களின் எதிர்ப்பு : தேர்தல் வெற்றிக்காகப் பயன்படுத்த முயலும் அமெரிக்க ஜனநாயகக் கட்சி

0

அமெரிக்காவின் ஒஹாயோ மாநிலத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் மேகக்கணி
கணினியியல் (Cloud-computing) தரவு மையங்களின் அபரிமிதமான வளர்ச்சிக்கு எதிராக
மக்களிடையே கிளம்பியுள்ள எதிர்ப்பு, வரவிருக்கும் இடைத்தேர்தலில் முக்கிய
அரசியல் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

அமேசான் மற்றும் மெட்டா போன்ற பெரு நிறுவனங்களின் தரவு மையங்களுக்கு
வழங்கப்பட்ட வரி விலக்குகள் காரணமாக ஒஹாயோ மாநிலத்திற்கு 2 பில்லியன்
டொலர்களுக்கும் அதிகமான விற்பனை வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அண்மையில்
வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள்

அதேவேளை, விவசாய நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதுடன், மின்கட்டண உயர்வும்
குடிநீர் தேவையும் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.

சமீபத்திய கருத்துக்கணிப்பின் படி, ஒஹாயோ மாநில மக்களில் 71 சதவீதத்தினர்
புதிய டேட்டா மையங்களின் கட்டுமானத்திற்குத் தற்காலிகத் தடை விதிக்க ஆதரவு
தெரிவித்துள்ளனர்.

இதனைப் பயன்படுத்தி, கிராமப்புறப் பகுதிகளில் பின்தங்கியுள்ள ஜனநாயகக்
கட்சியினர், குடியரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராகத் தீவிரப்
பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

குறிப்பாக, பெருநிறுவனங்களுக்கு அளிக்கப்படும் வரிச் சலுகைகளால் சாதாரண
மக்களின் மின்சாரக் கட்டணம் உயர்ந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டப்படுகின்றது.

நிலைமை தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து, இரு கட்சிகளைச் சேர்ந்த அரசியல்
தலைவர்களும் தரவு மையக் கட்டுமானங்களைக் கட்டுப்படுத்தவும், அவற்றுக்கான வரிச்
சலுகைகளைக் குறைக்கவும் புதிய கொள்கை முன்மொழிவுகளை வெளியிட வேண்டிய
கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

Source: https://tamilwin.com/article/public-opposition-data-centers-us-democratic-party-1789845675

NO COMMENTS

Exit mobile version