Home இலங்கை சமூகம் பிரதான வீதியை மறித்து வெடித்த போராட்டம்

பிரதான வீதியை மறித்து வெடித்த போராட்டம்

0

திருக்கடலூர் பிரதேச கடற்றொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டம் இன்று திருகோணமலை நிலாவெளி பிரதான வீதியை மறித்து இடம்பெறுகின்றது.

கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர்
வாழைச்சேனை கடற்பரப்பில் தங்களது கடற்றொழிலாளர்களையும் படகையும் சேதத்துக்கு
உள்ளாக்கி தாக்கியவர்களை கைது கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என
குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது பல வசாகங்கள் அடங்கிய பதாகைகளை
ஏந்தியவாறும் குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்

இதனால் ஒரு சில மணி நேரம்
அப்பகுதி போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. மீனவனின் உயிருக்கு உத்தரவாதம்
இல்லையா?,

மீனவனின் நிலமையை பார் உட்பட பல பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
இதில் பல நூற்றுக் கணக்கான மீனவக் குடும்பங்கள் வீதி மறியல் போராட்டத்தை
முன்னெடுத்திருந்தனர்.

NO COMMENTS

Exit mobile version