Home இலங்கை சமூகம் பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை

பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை

0

வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பின்னர், பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களில்
கவனமாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பில், மின்சாரம் மற்றும் எரிவாயு
பாதுகாப்பு தொடர்பாக பொது மக்கள் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்று
கோரப்பட்டுள்ளது.

கோரிக்கை

அதன்படி மின்சார ப்ளக் பொயிண்ட மற்றும் சுவிட்ச், உபகரணங்களை அணுகுவதற்கு
முன்னர், மின் தொழில்நுட்ப வல்லுநரின் ஆய்வை கட்டாயம் பெற வேண்டும் எனவும்,
ஈரமான எந்தவொரு மின் சாதனங்களையும் பயன்படுத்தக் கூடாது எனவும்
வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், வீட்டில் எரிவாயு கசிவு ஏற்பட்டால், அந்தச் சூழலில் எந்த மின்சாரம்
அல்லது எரிவாயுவால் இயங்கும் உபகரணங்களையும் இயக்குவதைத் தவிர்க்க வேண்டும்
எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version