Home இலங்கை சமூகம் நாட்டில் மீண்டும் மின் கட்டண அதிகரிப்பு…! வெளியான தகவல்

நாட்டில் மீண்டும் மின் கட்டண அதிகரிப்பு…! வெளியான தகவல்

0

மின் கட்டண உயர்வு குறித்த பரிந்துரைகளை அடுத்த வாரம் வெளியிடவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை முடிவடைந்த பொதுக்கருத்துக் காலத்தில் ஒன்பது மாகாணங்களிலிருந்தும் கருத்துக்களைச் சேகரித்துள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் திட்டம்

பொது முன்மொழிவுகள், இலங்கை மின்சார சபையின் (CEB) சமர்ப்பிப்பு மற்றும் மின்சார உற்பத்தி செலவுகள் குறித்த அறிக்கைகளை மதிப்பிட்ட பிறகு PUCSL தனது பரிந்துரையை வழங்குமென தெரிவித்துள்ளது.

மேலும், ஆய்வு இப்போது இறுதி கட்டத்தில் இருப்பதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அந்தவகையில், மின்சாரக் கட்டணத்தை 18.3% அதிகரிக்கும் இலங்கை மின்சார சபையின் திட்டம் தொடர்பான தனது பரிந்துரைகளை அடுத்த வாரம் வெளியிட உள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version