Home சினிமா புஷ்பா 2 படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா

புஷ்பா 2 படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா

0

புஷ்பா 2

இயக்குனர் சுகுமார் மற்றும் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகி 2021ஆம் ஆண்டு வெளிவந்த படம் புஷ்பா 1. பான் இந்தியன் திரைப்படமாக வெளிவந்த புஷ்பா முதல் பாகம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.

இப்படத்தில் பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, சுனில், அனுஷ்யா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். மேலும் ஒரே ஒரு பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடி இருந்தார். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் தற்போது ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. வருகிற டிசம்பர் 5ஆம் தேதி புஷ்பா 2 தி ரூல் திரைப்படம் வெளிவரவுள்ளது.

சமீபத்தில் தான் இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சமந்தாவிற்கு பதிலாக ஸ்ரீ லீலா ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் விமர்சனம்

இந்த நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்படும் புஷ்பா 2 தி ரூல் படத்தின் முதல் விமர்சனம் வெளிவந்துள்ளது. அதை பற்றி பார்க்கலாம் வாங்க. “இந்திய சினிமாவின் மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் திரைப்படம் புஷ்பா 2” என இந்த முதல் விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளனர். இது inside ரிப்போர்ட் என கூறப்படுகிறது.

மேலும் அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குனர் சுகுமார் இருவரின் உழைப்பிற்கும் பாராட்டுகளை இந்த பதிவில் தெரிவித்துள்ளனர். ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குரிய படமான புஷ்பா 2 குறித்து வெளிவந்துள்ள இந்த முதல் விமர்சனம், படத்திற்கு பாசிட்டிவாக அமைந்துள்ளது.

Source: https://cineulagam.com/article/pushpa-2-the-rule-movie-first-review-1732687158

NO COMMENTS

Exit mobile version