Home சினிமா கூலி படத்தில் இணைந்த கன்னட நடிகை.. யார் தெரியுமா?

கூலி படத்தில் இணைந்த கன்னட நடிகை.. யார் தெரியுமா?

0

ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் கூலி. இந்த படத்தில் ஸ்ருதி ஹாசன் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கன்னட திரையுலகில் முன்னணி நடிகரான உபேந்திரா கூலி படத்தில் இணைந்து உள்ளதாக அறிவிப்பு வந்தது.

ரச்சிதா ராம்

தற்போது அதை தொடர்ந்து கன்னட நடிகை ரச்சிதா ராம் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால், இது குறித்து படக்குழுவிடம் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளிவரவில்லை.

ரச்சிதா ராம் படங்கள் கன்னட படங்கள் மட்டுமின்றி ஏராளமான சீரியல்களிலும் நடித்து இருக்கிறார். தமிழில் நல்ல வரவேற்பை பெற்ற நந்தினி சீரியல் ஹீரோயின் நித்யா ராமின் தங்கை தான் ரச்சிதா ராம் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: https://cineulagam.com/article/rachita-ram-joins-rajinikanth-coolie-1724795194

NO COMMENTS

Exit mobile version