Home இலங்கை அரசியல் ராஜபக்சர்களின் பெரும் மோசடி அம்பலம்: சிக்கப்போகும் முக்கிய புள்ளி

ராஜபக்சர்களின் பெரும் மோசடி அம்பலம்: சிக்கப்போகும் முக்கிய புள்ளி

0

ராஜபக்சர்களின் மற்றுமொரு மோசடி குறித்த தகவல்கள் விரைவில் அம்பலப்படுத்தப்பட உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

அரகலய போராட்டத்தின் போது தீக்கிரையான வீடொன்றுக்காக ராஜபக்சக்களில் ஒருவர் மோசடியான முறையில் நட்டஈடு பெற்றுக்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

ராஜபக்ச குடும்பத்தினர்

ராஜபக்ச குடும்பத்தினர் நட்டஈடு பெற்றுக்கொண்ட போதிலும் உண்மையில் வீட்டின் உரிமையாளர்கள் அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

செவணகல பகுதியில் தீக்கிரையான வீடொன்றுக்கு இவ்வாறு ராஜபக்ச குடும்பத்தினர் நட்டஈடு பெற்றுக்கொண்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தீக்கிரையான வீட்டின் காணி உரிமை வேறு ஒருவரின் பெயரில் இருந்ததாகவும், வீட்டின் உரிமையும் வேறு ஒருவரின் பெயரில் இருந்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
எனினும் ராஜபக்ச குடும்பத்தினர் இந்த வீட்டுக்கான நட்டஈட்டை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பொதுக்கூட்டம்

இந்த தகவல்கள் அண்மையில் கிடைத்ததாகவும், இதை இன்னும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

புத்தள பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஜனாதிபதி இந்த விடயத்தை அம்பலப்படுத்தியுள்ளார்.

ராஜபக்ச குடும்பத்தினர் என ஜனாதிபதி குறிப்பிட்ட போதிலும் யார் இவ்வாறு மோசடியாக நட்டஈடு பெற்றுக்கொண்ட ராஜபக்ச குடும்ப உறுப்பினர் என்பது பற்றிய விபரங்களை ஜனாதிபதி வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version