பருத்தித்துறையில் அரங்கேற்றப்பட்ட தந்தையும், மகனும் மீதான கொடூர வாள்
வெட்டு தாக்குதல் குறித்து பருத்தித்துறை பொலிஸார் எடுத்த நடவடிக்கை
தொடர்பாக அறிக்கை ஒன்றைக் கோரியதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன்
ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ரௌடிகள் தொடர்பாக மக்கள் பொலிஸ் நிலையத்துக்கு வர அச்சப்படும் சூழ்நிலை
காணப்படுகிறது.
பொலிஸாருக்கு வழங்கும் தகவல்கள் குற்றவாளிகளுக்கு உடனேயே
கடத்தப்படுகிறது என்ற விடயம் தொடர்பாக விளக்கம் கோரினேன்.
முறைப்பாடு
பருத்தித்துறையில் நடைபெறும் அனைத்து குற்றச் செயல்களும் கட்டுப்படுத்த
வேண்டும் என்று கோரினேன்.
இந்த விடயங்கள் தொடர்பாக பொதுமக்கள் பாதுகாப்பு
அமைச்சரைச் சந்தித்து விடயங்களை தெரிவிக்க உள்ளேன்.
பல விடயங்களில் பொலிஸாரும்
உடந்தையாக உள்ளனர் என மக்கள் எனக்கு தந்த முறைப்பாடுகளையும் தெரிவித்தேன் என
தெரிவித்தார்.
