Home இலங்கை சமூகம் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நீதி கோரிய பேரணிக்கு அழைப்பு

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நீதி கோரிய பேரணிக்கு அழைப்பு

0

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சர்வதேச நீதி கோரிய பேரணியில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம், ஒகஸ்ட் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட உள்ள நிலையில், இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பேரணி, ஒகஸ்ட் 30ஆம் திகதி காலை 10.00 மணியளவில் யாழ். கிட்டுப் பூங்கா முன்பாக நடைபெறும்.

சர்வதேச நீதிப் பொறிமுறை

தமிழர்களுக்கு எந்த வித நீதியும் உரிமைகளும் கிடைக்காமையால் சர்வதேச நீதிப் பொறிமுறை ஊடாக நீதியைப் பெற்றுக் கொள்வதற்கும் இனிவரும் காலங்களில் இப்படியான ஆட்கடத்தல் சம்பவங்கள் மீள நிகழாமையை வலியுறுத்தியும் இந்த பேரணி நடத்தப்பட உள்ளது. 

NO COMMENTS

Exit mobile version