Home இலங்கை சமூகம் ரமழான் நோன்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

ரமழான் நோன்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

0

புனித ரமழான் நோன்பு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(2) ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது.

ஹிஜ்ரி 1446 புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு இன்றையதினம்(28.02.2025) கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.

இதன்போதே, ரமழான் நோன்பு தொடர்பான அறிவிப்பு வெளியானது.

புனித நோன்பு

எனினும், நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலும் ரமழான் மாத தலைப்பிறை தென்பட்டதற்கான ஆதார பூர்வமான தகவல்கள் இல்லை.

எனவே, ஷஹ்பான் மாதத்தை 30ஆக பூரணப்படுத்தி ஞாயிற்றுக்கிழமை புனித நோன்பு ஆரம்பமாகும் என தீர்மானிக்கப்பட்டது.

NO COMMENTS

Exit mobile version