Home இலங்கை சமூகம் யாழில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்த கடற்றொழில் அமைச்சர்

யாழில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்த கடற்றொழில் அமைச்சர்

0

கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்  (Ramalingam Chandrasekar) யாழ்ப்பாணத்தில் (Jaffna) வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடினார்.

அமைச்சரின் குறித்த பயணமானது நேற்றைய தினம் (24.11.2024) இடம்பெற்றுள்ளது.

அமைச்சருடன் நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரனும் சென்றுள்ளார்.

வெள்ள பாதிப்பு 

இதன்போது, யாழ்ப்பாணம் – ஜே – 133 கிராம உத்தியோகத்தர் பிரிவு, காக்கைதீவு பகுதிக்கு சென்ற அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டதுடன், அங்கு வீதி ஓரங்களில் வீசப்பட்டுள்ள குப்பைகளையும் பார்வையிட்டு பிரதேச மக்களிடம் அது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்

தொடர்ந்து சங்கானை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மூளாய் பகுதிக்கு சென்ற அமைச்சர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடினார்.

NO COMMENTS

Exit mobile version