முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அநுரவால் மலையகத்திற்கு எவ்வித பயனுமில்லை : மருதபாண்டி ராமேஸ்வரன்

புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் (Anura Kumara Dissanayake) மலையகத்திற்கு எவ்வித பயனுமில்லை என இலங்கை தொழிலாளர்
காங்கிரஸின் தவிசாளரும் நுவரெலியா (Nuwara Eliya) மாவட்ட வேட்பாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன் (Maruthapandi Rameswaran) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை இன்று (21) பொகவந்தலாவ (Bagawantalawa) பகுதியில் ஏற்பாடு
செய்யப்பட்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த ஜனாதிபதி
தேர்தலில் நாம் கூறியதுபடி பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளத்தை
பெற்றுக்கொடுத்தோம்.

கட்சி வேட்பாளர்கள்

எதிர்வரும் காலங்களில் எமது சமுகத்திற்கு என்ன தேவையென நாம் சிந்திக்க வேண்டும், எமது சமுகத்திற்கு கல்வி என்பதே முக்கியம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆட்சியில்
இருந்த காலப்பகுதியில் கல்விக்கு முக்கியதுவம் வழங்கியிருக்கிறது.

அநுரவால் மலையகத்திற்கு எவ்வித பயனுமில்லை : மருதபாண்டி ராமேஸ்வரன் | Rameswaran Denied The Allegation Regarding Anura

தேர்தல்
காலங்களில் வாக்கு கேட்டு வரும் மாற்று கட்சியின் வேட்பாளர்கள் காங்கிரஸ் என்ன
செய்தது என கேள்வி எழுப்புவார்கள், இது போன்ற கேள்வி எழுப்பும் போது மாற்று
கட்சி வேட்பாளர்கள் மக்களுக்கு செய்துள்ளார்கள் என கேட்கிறேன்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்திலோ அல்லது உதவி ஆசிரியர் நியமணங்கள்
பெற்றுக்கொடுத்த போது இலங்கை தொழிலாளர் காங்கிரசை சார்ந்தவர்களுக்கு மாத்திரம்
பெற்றுக்கொடுக்கவில்லை இ.தொ.கா.என்பது சமுக ரீதியாக மாத்திரம் செயற்படும்.

சுயேட்சை கட்சிகள்

எந்த சின்னத்தில் கேட்பது என்பது கூட தெரியாமல் அநேகமான சுயேட்சை கட்சிகள்
இம்முறை போட்டியிடுகின்றன.

நாடாளுமன்றத்திற்கு போனவர்கள் மக்களுக்கு என்ன
செய்துள்ளார்கள் ஆனால் இருவர் மாத்திரம் பொருளாதார நெருக்கடியின் மத்தியில்
மக்களுக்கு எம்மால் முடிந்த சேவைகளை முன்னெடுத்துள்ளோம்.

அநுரவால் மலையகத்திற்கு எவ்வித பயனுமில்லை : மருதபாண்டி ராமேஸ்வரன் | Rameswaran Denied The Allegation Regarding Anura

எமது அரசாங்கத்தில்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் (Ranil Wickramasinghe) காணி உரிமையினை கோரினோம் அதனை
பெற்றுக்கொடுத்துள்ளோம்.

மலையக பாடசாலைகளுக்கு 300 மில்லியன் நிதியினை எமது அரசாங்கத்தில்
வழங்கியிருக்கிறோம் மக்களுக்கு யார் சேவை செய்துள்ளனர் என சிந்தித்து மக்கள்
வாக்களிக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.