Home இலங்கை சமூகம் பாக்கு நீரினையை கடந்து சாதனை படைத்த சிறுவனை பாராட்டிய ரணில்

பாக்கு நீரினையை கடந்து சாதனை படைத்த சிறுவனை பாராட்டிய ரணில்

0

Courtesy: H A Roshan

பாக்கு நீரினையை கடந்து சாதனை படைத்த 13 வயதான திருகோணமலையை சேர்ந்த ஹரிகரன் தன்வந்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் பாராட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் இச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சாதனை படைத்த மாணவன் 

கடந்த மார்ச் மாதம் 1ஆம் திகதி பாக்கு நீரினையை கடந்து சாதனை படைத்த மாணவனை ஜனாதிபதி இவ்வாறு பாராட்டியதுடன் கடலில் நீந்திய அனுபவங்களையும் கேட்டறிந்து கொண்டுள்ளார்.

இந்த சந்திப்பில் சாதனை படைத்த சிறுவனின் தாய் மற்றும் தந்தையர் என குடும்பஸ்தரும் கலந்து கொண்டுள்ளனர்.

Source: https://tamilwin.com/article/ranil-appreciated-harikaran-dhanwant-palk-strait-1720468046

NO COMMENTS

Exit mobile version