முன்னாள் ஜனாதிபதி ரணிலை கைது செய்வது தொடர்பில் இரகசிய தகவல் ஒன்றை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வெளியிட்டார்.
நாடாளுமன்றில் தற்போது உரையாற்றும் அவர், “ரணிலின் பிரத்தியேக செயளாலரை விசாரணை செய்துள்ளோம்.
அவரின் ஆலோசகரை நிதி மோசடி பிரிவுக்கு அழைத்து வாக்குமூலம் வாங்கியுள்ளோம். அடுத்து யாரை விசாரணை செய்வோம்” என்று தெரிவித்தார்.
வாக்குமூலம்
ஜனாதிபதி, குறித்த கருத்து மூலம் மறைமுகமாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கைது செய்வதை குறிப்பிட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், முன்னாள் கடற்படை தளபதியை கைது செய்த போது புலம்பெயர் தமிழர்களின் தேவைக்காக கைது செய்யப்பட்டதாக பத்திரிகையாளர் மாநாடுகளை நடத்தினர்.
அது அல்ல உண்மை, நீதிமன்றில் அளிக்கப்பட்ட தீர்ப்பின் பின்னரே அவர் கைது செய்யப்பட்டார்.
எமது நாட்டில் நீதி அனைவருக்கும் சமனானது என்றார்.
தவறு செய்தவர்கள் அவற்றை ஒரு செய்தியாகவே பார்க்கின்றனர். ஆனால் தவறு செய்தவர்களுக்கு தெரியும் சட்டம் எவ்வாறு செயற்படும் என்று” என குறிப்பிட்டுள்ளார்.
