Home இலங்கை அரசியல் சலுகை சர்சையில் பின்வாங்குகிறார் ரணில்!

சலுகை சர்சையில் பின்வாங்குகிறார் ரணில்!

0

நாட்டின் ஜனாதிபதிகளின் சலுகைகள் பறிக்கப்படுவது குறித்து முன்னாள் ஜனாதிபதிகளுடன் ஒரு குழுவாக விவாதிக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

கட்சி ஆர்வலர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை

அதன்படி, முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்குவதை எதிர்த்து நீதிமன்றம் செல்லப் போவதில்லை என்று முன்னாள் ரணில் விக்ரமசிங்க கட்சி சுட்டிக்காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதிகள் உரிமைகள் சட்டத்தை இரத்து செய்வதற்கு எதிராக எந்தவொரு சட்ட நடவடிக்கையிலும் தான் ஈடுபடப் போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க சமீபத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version