Home இலங்கை அரசியல் வரிச்சுமையிலும் வருமானத்தை அதிகரிக்கும் பொருளாதாரம்: ரணில் சுட்டிக்காட்டு

வரிச்சுமையிலும் வருமானத்தை அதிகரிக்கும் பொருளாதாரம்: ரணில் சுட்டிக்காட்டு

0

வரிச்சுமை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் மக்களின் வருமானத்தை அதிகரிக்கும் வகையிலான பொருளாதாரம் உருவாக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

தெனியாய – மொரவக்க பகுதியில் நேற்று (06) இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த ரணில், “ நாங்கள் கூறியதை போன்றே நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஏற்றுமதி பொருளாதாரம்

இருந்த போதிலும், சில வர்த்தகர்களிடம் கலந்துரையாடிய போது, சிறந்த முறையில் வர்த்தகம் இடம்பெறுவதாகக் குறிப்பிட்டனர். இதன்படி, எங்களைத் தூற்றுகின்ற சிலரும் தற்போது நன்மையடைகின்றனர்.

அத்துடன் வர்த்தகர்களையும் விவசாயிகளையும் முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு தற்போதைய சந்தை முறைமை போதுமானதாக இல்லை என  அநுரகுமார
திசாநாயக்க (Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார். இதன்படி, அவரும் ஏற்றுமதி பொருளாதாரத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்.

எனினும் அநுரகுமார
திசாநாயக்கவின் விஞ்ஞாபனத்தில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை ரத்து செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கிச் செல்வதாயின் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை அவசியமாகும்.” என்றார்.

எனவே, இந்த பரஸ்பர முரண்பாடு தொடர்பில் விளக்கமளிக்குமாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார
திசாநாயக்கவிடம் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version