கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு விசாரணை இடம்பெற்று வரும் நிலையில்,
அங்கு சிறைச்சாலை பேருந்து கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் குழப்பமான சூழ்நிலையொன்று ஏற்பட்டுள்ளது.
நீதிமன்ற வளாகத்தில் குவிந்திருந்த ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவாளர்கள், அவரை கொண்டு செல்லவே குறித்த பேருந்த அங்கு கொண்டுவரப்பட்டதாக எண்ணி இவ்வாறு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
அதன்போது, ரணிலின் ஆதரவாளர்கள், எமது தலைவரை இந்த பேருந்தில் செல்லவிட மாட்டோம் என கோஷங்களை எழுப்பி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆதரவாளர்களிடத்தில் பதற்றம்
எவ்வாறாயினும், இந்த சிறைச்சாலை பேருந்தானது, நீதிமன்றத்தில் உள்ள ஏனையே சந்தேகநபர்களை கொண்டு செல்லவே கொண்டு வரப்பட்டதாக அதனை நிர்வகிக்கும் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில், குறித்த பேருந்தை கண்ட ரணிலின் ஆதரவாளர்கள் பதற்றமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
