முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

5 வருடங்களுக்குள் சுதந்திரமான பாலஸ்தீன அரசு ஸ்தாபிக்கப்பட வேண்டும்: ரணில் வலியுறுத்து

இந்து சமுத்திரத்தின் ஸ்திரத்தன்மைக்காக, 5 வருடங்களுக்குள் சுதந்திரமானதும்
சுயாதீனமானதுமான பாலஸ்தீன அரசை நிறுவி, இஸ்ரேல் அரசன் பாதுகாப்பை உறுதி
செய்யும் நடவடிக்கைகளின் மூலம் காஸா பகுதியில் போர் மோதல்களை விரைவாக
முடிவுக்குக் கொண்டு வருவது அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
தெரிவித்துள்ளார்.

இந்து சமுத்திரத்தை அண்டிய நாடுகள் மற்றும் சமுத்திரத்தை பெருமளவில்
பயன்படுத்தும் பிற நாடுகளைப் பாதிக்கும் பொதுவான எதிர்பார்ப்புகள் மற்றும்
பிரச்சினைகள் குறித்து ஆராயும் 7ஆவது இந்து சமுத்திர மாநாடு அவுஸ்திரேலியாவின்
பேர்த் நகரில் நேற்று(09.02.2024) ஆரம்பமாகியுள்ளது.

மாயமான அமெரிக்க உலங்கு வானூர்தி : சடலமாக மீட்கப்பட்ட ஐவர்

மாயமான அமெரிக்க உலங்கு வானூர்தி : சடலமாக மீட்கப்பட்ட ஐவர்

இந்த மாநாட்டை “நிலையான மற்றும் நிலைபேறான இந்து சமுத்திரத்தை நோக்கி” என்ற
தொனிப் பொருளில் இந்திய வெளியுறவு அமைச்சு மற்றும் அவுஸ்திரேலிய அரசுடன் இணைந்து
இந்திய மன்றம் ஏற்பாடு செய்துள்ளது.

குறித்த மாநாட்டில் கலந்துக்கொண்டு ஆற்றிய பிரதான உரையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் உரையாற்றிய அவர்,

இந்து சமுத்திரத்தில் நிலவும் பிரச்சினை

உலகின் பலமான நாடுகள் தமது தலைவிதியைத் தீர்மானிக்கும் வரை காத்திருக்காமல்,
தமக்கான பாதையை அமைத்துக் கொள்ளும் இயலுமை இந்து சமுத்திர வலய நாடுகளுக்கு
உள்ளது.

5 வருடங்களுக்குள் சுதந்திரமான பாலஸ்தீன அரசு ஸ்தாபிக்கப்பட வேண்டும்: ரணில் வலியுறுத்து | Ranil Ndependent Palestinian Established 5Years

இந்து சமுத்திர வலய நாடுகளின் நம்பிக்கையையும் விழிப்புணர்வையும்
மேம்படுத்துவதன் மூலம் பாதுகாப்பான இந்து சமுத்திரத்தை உருவாக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

2050 ஆண்டளவில் இந்தியா, இந்தோநேசியா போன்ற நாடுகளின் மொத்த தேசிய உற்பத்தி 8
மடங்காக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் வகையில் நாடுகளுக்கு இடையிலான தொடர்புகளை வலுவூப்படுத்தும்
உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியது அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.

5 வருடங்களுக்குள் சுதந்திரமான பாலஸ்தீன அரசு ஸ்தாபிக்கப்பட வேண்டும்: ரணில் வலியுறுத்து | Ranil Ndependent Palestinian Established 5Years

இந்து சமுத்திரத்தில் நிலவும் முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு
காண்பதற்கு விரிவான பிராந்திய திட்டமொன்று அவசியம் என்றும், அதனை இந்து
சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் தலைவர்களால் மட்டுமே செய்ய முடியும்.

கடல் மற்றும் விமான போக்குவரத்துச் சுதந்திரத்துக்கு இடையூறு விளைவிக்காத
வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பிலான ஒழுங்கு விதிகள், காலநிலை நெருக்கடியை
கையாள்வது மற்றும் இந்து சமுத்திரத்தின் நிலையான பயன்பாடு தொடர்பான வழிகாட்டல்
விதிமுறைகளின் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

5 வருடங்களுக்குள் சுதந்திரமான பாலஸ்தீன அரசு ஸ்தாபிக்கப்பட வேண்டும்: ரணில் வலியுறுத்து | Ranil Ndependent Palestinian Established 5Years

மேலும், வர்த்தகப் போக்குவரத்துகளுக்காக தற்காலத்தில் பயன்படுத்தப்படும் சுயஸ்
கால்வாய் உள்ளிட்டவை எதிர்காலத்தில் போதுமானதாக இருக்காது.

பிராந்தியத்தின் விநியோக மையம்

எனவே, பிராந்தியத்தின் விநியோக மையம் என்ற வகையில் இலங்கை தென்னிந்தியாவுடன்
வர்த்தகத்தை எளிதாக்குவதற்கான புதிய தரைவழித் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு
முயற்சித்து வருகின்றது என கூறியுள்ளார்.

5 வருடங்களுக்குள் சுதந்திரமான பாலஸ்தீன அரசு ஸ்தாபிக்கப்பட வேண்டும்: ரணில் வலியுறுத்து | Ranil Ndependent Palestinian Established 5Years

அதேபோல், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை பேணுவதன்
முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதேபோன்றே காலநிலை மாற்றத்துக்கான
தீர்வுகளைக் கண்டறிவதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங், இந்திய வெளியுறவு அமைச்சர்
சுப்பிரமணியம் ஜெயசங்கர், சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் டொக்டர் விவியன்
பாலகிருஷ்ணன் மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் உள்ளிட்ட இந்து சமுத்திர
நாடுகளின் பிரதிநிதிகள் , இந்திய மன்றத்தின் ராம் மாதவ் உள்ளிட்ட
பிரதிநிதிகளும் மாநாட்டில் கலந்துகொண்டிருந்தனர்.

கொழும்பில் மோசமான முறையில் உணவு தயாரித்த ஹோட்டலுக்கு அபராதம்

கொழும்பில் மோசமான முறையில் உணவு தயாரித்த ஹோட்டலுக்கு அபராதம்

மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்