கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) விரைவில் வீடு திரும்புவார் என்று மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் (Mohamed Nasheed) நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக தளமான X இல் வெளியிட்ட பதிவிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் முன்னாள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
தவறாகப் பயன்படுத்தவில்லை
எனினும், முன்னாள் ஜனாதிபதி அரச நிதியை தவறாகப் பயன்படுத்தவில்லை என்று ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பதிவில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே விரைவில் நாடு திரும்புவதை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்குவதாக மாலத்தீவின் முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் கூறியுள்ளார்.

