முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரணதுங்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது தொடர்பில் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போதே தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
சந்திரிக்காவின் எதிர்ப்பு
இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது,
ஏனைய தலைவர்கள் நாளை ஐக்கிய தேசிய கட்சி தமைமையகத்தில் 10 மணிக்கு கூடவுள்ளனர்.
அப்போது தீர்க்கமான முடிவெடுப்பதோடு அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடப்படும் எனவும் தெரிவித்தார்.

