முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் போட்டியிடமாட்டார்: கம்மன்பில உறுதி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடமாட்டார்
என்பது உறுதி என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான
உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் குறிப்பிட்டதாவது, படுதோல்வியைத் தவிர்ப்பதற்காகவே முன்கூட்டியே நாடாளுமன்றத் தேர்தலை
நடத்துமாறு பசில் ராஜபக்ச கோருகின்றார். ஆனால், எந்தத் தேர்தல் நடந்தாலும்
மொட்டுக் கட்சியால் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையானவர்களுக்கு கட்டுநாயக்காவில் காத்திருக்கும் நெருக்கடி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையானவர்களுக்கு கட்டுநாயக்காவில் காத்திருக்கும் நெருக்கடி

நாடாளுமன்றத் தேர்தல்

மொட்டுக் கட்சிக்கு ஆதரவு உள்ளது, மக்கள் உள்ளனர் என்றெல்லாம் அக்கட்சியினர்
மாயையை உருவாக்கி வருகின்றனர். ஜனாதிபதித் தேர்தலில் படுதோல்வி ஏற்படும்
என்பது பசிலுக்குத் தெரியும்.

எனவே, ஜனாதிபதித் தேர்தல் முதலில்
நடத்தப்பட்டால் நாடாளுமன்றத் தேர்தலுக்கு வேலை செய்வதற்கு எவரும்
இருக்கமாட்டார்கள். அதனால் மொட்டுத் தரப்பினருக்கு மேலும் பின்னடைவு ஏற்படும்.

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் போட்டியிடமாட்டார்: கம்மன்பில உறுதி | Ranil Will Not Contest The Elections

இதனாலேயே நாடாளுமன்றத்தில் சில ஆசனங்களைத் தக்கவைத்துக்கொள்ள முன்கூட்டியே
நாடாளுமன்றத் தேர்தல் கோரப்பட்டுள்ளது. இரண்டாவது அரச ஊடகம் மற்றும் அரச அதிகாரிகள், பொலிஸார் ஊடாக ஏதேனும்
ஒத்துழைப்பைப் பெறலாம் என பசில் கருதுகின்றார்.

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர்
நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டால் இந்த ஒத்துழைப்பும் கிடைக்கப்பெற
மாட்டாது.அதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடமாட்டார் என்பது
உறுதி என கூறியுள்ளார்.

இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சரிடம் முன்வைத்துள்ள கோரிக்கை

இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சரிடம் முன்வைத்துள்ள கோரிக்கை

சுதந்திர கட்சியில் இருந்து மைத்திரியை விரட்டுங்கள்: மேர்வின் அறைகூவல்

சுதந்திர கட்சியில் இருந்து மைத்திரியை விரட்டுங்கள்: மேர்வின் அறைகூவல்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்