Home ஏனையவை வாழ்க்கைமுறை இலங்கையில் தீவிரம் அடையும் டெங்கு – மாணவர்கள் உட்பட 21 பேர் மரணம்

இலங்கையில் தீவிரம் அடையும் டெங்கு – மாணவர்கள் உட்பட 21 பேர் மரணம்

0

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதன் காரணமாக, மருத்துவமனைகளின் கொள்ளளவு எல்லை தாண்டியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது வரை டெங்கு நோய் காரணமாக 21 பேர் உயிரிழந்துள்ளதுடன், அவர்களுள் ஐவர் பாடசாலை மாணவர்களும் அடங்குவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் தற்காலிக பணிப்பாளர், மருத்துவர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.

டெங்கு தொற்றாளர்கள்

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், எதிர்வரும் 15ஆம் திகதி முதல் டெங்கு ஒழிப்பு வாரமொன்றை முன்னெடுக்க பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

பொது இடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை உள்ளடக்கும் வகையில் இந்த ஒழிப்பு வாரம் எதிர்வரும் 20ஆம் திகதி வரை செயல்படுத்தப்படவுள்ளது.

இலங்கையில் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் அதிகளவான டெங்கு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://tamilwin.com/article/rapid-increase-in-dengue-patients-1781321014

NO COMMENTS

Exit mobile version