Home இலங்கை இலங்கையில் தென்படவுள்ள அரிய வானியல் நிகழ்வு!

இலங்கையில் தென்படவுள்ள அரிய வானியல் நிகழ்வு!

0

அரிய வானியல் நிகழ்வான சனியின் சந்திர (Lunar Occultation) மறைவானது எதிர்வரும் 24ஆம் திகதி நள்ளிரவுக்குப் பிறகு இலங்கையின் வான்பரப்பில் தென்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த தகவலை, “ஆர்தர் சி கிளார்க் இன்ஸ்டிடியூட் ஃபார் மாடர்ன் டெக்னோலொஜிஸ்” (ACCIMT) நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த வானிலை மாற்றமானது ஜூலை 24ஆம் திகதி அன்று காலை 00:50 மணிக்கு தொடங்கி ஜூலை 25ஆம் திகதி காலை 00:40 மணி வரை நிகழவுள்ளதாக கூறப்படுகின்றது.

​​பூமியின் பார்வை

சந்திரன் சனிக்கு முன்னால் நகர்ந்து ​​பூமியின் பார்வையில் இருந்து விலகும் நிகழ்வே சனியின் சந்திர மறைவு என்று அழைக்கப்படுகின்றது.

இந்தநிலையில், இதனை வெற்றுக் கண்ணால் சந்திரனைப் பார்ப்பதன் மூலம் காணலாம் என கூறப்படுகின்றது.

அதேவேளை, தொலைநோக்கி அல்லது ஒரு ஜோடி இரட்டைத் தொலை நோக்காடி (Binoculars) மூலம் தெளிவாகக் கண்டறிய முடியும் என ஆர்தர் சி கிளார்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கால அளவு

இந்நிகழ்வின் போது, சந்திரன் ஏறக்குறைய ஒரு மணிநேரம் இருபது நிமிடங்களுக்கு சனியை மறைக்கும் இந்த நிகழ்வை பூமியில் உள்ள சில பகுதிகளில் மட்டுமே காணமுடியும்.

இதற்கமைய, இலங்கையில் (Sri Lanka) இந்த நிகழ்விற்கான நேரம் மற்றும் கால அளவு ஆகியவை இடத்தினை பொறுத்து சற்று மாறுபடுமென தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சனியின் அடுத்த சந்திர மறைவானது, இலங்கையின் வான்பரப்பில் 2037ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் திகதி அன்றே தென்படும் என கணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.    

NO COMMENTS

Exit mobile version