Home சினிமா சிவகார்த்திகேயனை தொடர்ந்து சென்சேஷனல் ஹீரோவை இயக்கப்போகும் ரவிக்குமார்.. வேற லெவல் காம்போ

சிவகார்த்திகேயனை தொடர்ந்து சென்சேஷனல் ஹீரோவை இயக்கப்போகும் ரவிக்குமார்.. வேற லெவல் காம்போ

0

ரவிக்குமார்

இன்று நேற்று நாளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ரவிக்குமார். முதல் படத்திலேயே ரசிகர்களின் மனம் கவர்ந்த இயக்குநர் என்கிற பெயரை சம்பாதித்தார்.

இவர் இயக்கத்தில் இரண்டாவதாக அயலான் திரைப்படம் வெளிவந்தது. பல போராட்டத்திற்கு பின் வெளிவந்த அயலான் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இன்று நேற்று நாளை மற்றும் அயலான் என வித்தியாசமான கதைக்களத்தை வைத்து இரண்டு திரைப்படங்களை கொடுத்திருக்கும் இயக்குநர் ரவிக்குமார் அடுத்ததாக இயக்கப்போகும் படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

சூரி

அதன்படி, இயக்குநர் ரவிக்குமார் அடுத்ததாக நடிகர் சூரியை இயக்கப்போகிறாராம். இப்படத்திற்கான வேலைகள் நடைபெற்று வருவதாகவும், மண்டாடி படத்தை முடித்துவிட்டு இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு பின் ரவிக்குமார் இயக்கத்தில் சூரி நடிப்பார் என தகவல் தெரிவிக்கின்றனர். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Source: https://cineulagam.com/article/ravikumar-going-to-direct-soori-1756717458

NO COMMENTS

Exit mobile version