முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தரப்பில் அவர், அவரின் சாரதி மற்றும் அவரின் சகா ஆகிய மூவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
எனினும், பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் விசாரணை முடிவுகள் எப்போது வெளிவரும் உள்ளிட்ட பல கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.
இதேபோல, கடந்த 2015ஆம் ஆண்டு கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், அரச வாகனம் ஒன்றை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், தற்போதைய அரசாங்கமும் மக்களிடத்தில் பேசுபொருளை உருவாக்குவதற்காக இந்த கைது நடவடிக்கைகளை மேற்கொள்கின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது அதிர்வு நிகழ்ச்சி,
