Home இலங்கை சமூகம் ஹட்டனில் உயிரிழந்த நிலையில் சிறுத்தையின் சடலம் மீட்பு

ஹட்டனில் உயிரிழந்த நிலையில் சிறுத்தையின் சடலம் மீட்பு

0

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை மேபீல்ட் தோட்டத்தில் உடலில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சிறுத்தையின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக நல்லதண்ணி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த  சிறுத்தையின் சடலமானது நேற்று (9) மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த இந்த பெண் சிறுத்தைக்கு சுமார் 3 வயது இருக்கும் எனவும், தலையில்
பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அந்த காயம் வாகனத்தில் மோதியதாலோ அல்லது யாரோ
ஒருவர் தாக்கியதாலோ ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரேத பரிசோதனை

மேபீல்ட் தோட்டத்தின் தேயிலை மலையில் உயிரிழந்த நிலையில் சிறுத்தையின் சடலம்
இருப்பதாக திம்புள்ள பத்தனை பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த
சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஹட்டன் நீதவானின் உத்தரவின் பேரில்
சிறுத்தையின் சடலம் ரந்தெனிகல வனவிலங்கு கால்நடை வைத்தியசாலைக்கு பிரேத
பரிசோதனைக்காக அனுப்பப்படும் என்றும் வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version