இலங்கை தாதியர் சேவையில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதன்படி, தாதியர் சேவையில் உள்ள வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புக்கான இரண்டு வர்த்தமானி அறிவிப்புகள் வெளியிடப்படவுள்ளன.
வெற்றிடங்கள்
அதன்படி, 2020 முதல் 2022 ஆம் ஆண்டு வரை கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியவர்களில் 2,650 பேரை பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
மேலும், தாதியர் பட்டம் பெற்ற 850 பட்டதாரிகளையும் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
