Courtesy: Sivaa Mayuri
நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகள் தொடர்பில் மீளாய்வு செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் இந்த அறிக்கையை, உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் கே.டி. கித்சிறி தலைமையிலான குழு, நேற்று (02) கையளித்துள்ளது.
கொடுப்பனவுகள்
இதனையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகள் மீளமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, இதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அத்துடன், இந்த முறை மாற்றத்துக்கு ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதிகள் தமது ஆட்சேபனைகளை தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.