மறைந்த ஊடகவியலாளர்களை போற்றும் முகமாகவும், அவர்களின் தியாகத்தை உலகுக்கும் எதிர்கால சந்ததிக்கும் எடுத்துக்கூறும் முகமாகவும் றீச்ஷா ஒருங்கிணைந்த பண்ணையைில் நினைவிடமொன்று அமைக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் அவர்களது தியாகத்தை என்றும் போற்றும் முகமாக கிளிநொச்சியில் அமைந்துள்ள றீச்ஷா ஒருங்கிணைந்த பண்ணையைில் நினைவிடம் ஒன்று எதிர்வரும் 14.12.2025 அன்று காலை 10.00 மணிக்கு திறக்கப்படவுள்ளது.
இந்த நிகழ்வுக்கு இலங்கையின் அனைத்து சமூகநலன் விரும்பிகளுக்கும் றீச்ஷா ஒருங்கிணைந்த பண்ணை அழைப்பு விடுத்துள்ளது.
தொடரும் நீதித்தேடல்கள்
உண்மையை எழுதிய ஊடக கைகள் இன்று இல்லையென்றாலும், அவை எழுதிய வரிகள் இன்றும் நம்மோடு வாழ்கின்றன.
அந்த வகையில் இலங்கையில் மறைந்த, காணாமலாக்கப்பட்ட, மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நீதித்தேடல்கள் இன்றும் தொடர்கின்றன.
உரிமைவாதத்திற்கான அவர்களின் குரல்கள் அச்சுறுத்தல்களுக்கும் அஞ்சாமல் உண்மையை உரக்கச் சொன்னவை.
போர்க்களங்களிலும், எல்லைகளிலும், உள்ளூரிலும் உயிரைப் பணயம் வைத்து செய்தி திரட்டி உலகம் அறியச்செய்த ஊடகர்களை பேற்றவேண்டியது அவர்களுக்கான நீதியை பெற்றுக்கொடுக்கவேண்டியது அனைவரினதும் கடமை.
குறிப்பாக இலங்கையின் படைப்புதுறையில் இவர்களின் பங்கானது இதன்மூலம் வெளிப்படுத்தப்படவுள்ளது.
