Home இலங்கை சமூகம் பாரம்பரிய நினைவுகளை மீட்ட றீ(ச்)ஷாவின் உணவு திருவிழா! நெகிழ்ச்சியில் மக்கள்

பாரம்பரிய நினைவுகளை மீட்ட றீ(ச்)ஷாவின் உணவு திருவிழா! நெகிழ்ச்சியில் மக்கள்

0

கிளிநொச்சி- பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள றீ(ச்)ஷாவின் உணவு திருவிழா கோலாகலமாக ஆரம்பமாகி நிறைவடைந்தள்ளது.

இந்த மாபெரும் உணவு திருவிழா கடந்த 5ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 6,7ஆம் திகதிகளில் உட்பட மூன்று நாட்கள் நடைபெற்றது.

இந்த உணவுத் திருவிழாவிற்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்து மக்கள் வருகை தந்ததுடன் சுற்றுலா பயணிகளும் வருகை தந்துள்ளனர்.

இந்த உணவு திருவிழாவில், இசை நிகழ்ச்சி உட்பட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் நடைபெற்றிருந்தன.

பாரம்பரியமான உணவுகள் உடனடியாகவும் பாரம்பரிய முறைப்படியும் செய்து கொடுத்ததுவுவே இங்கு சிறப்பாக பார்க்கப்பட்டுள்ளது.

அதுமட்டுல்லாது வருகை தந்த மக்கள் தங்களது பாரம்பரியங்களையும், பழைய ஊர் ஞாபகங்களையும் மீட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

றீச்சாவின் உணவுதிருவிழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் றீச்சா உரிமையாளர் கந்தையா பாஸ்கரன் நன்றிகளை தெரிவித்துள்ளார்.

றீ(ச்)ஷாவின் உணவு திருவிழா கோலாகல காட்சிகளை கீழுள்ள காணொளியில் காணலாம்.

NO COMMENTS

Exit mobile version