Home இலங்கை கல்வி பல்கலைக்கழக அனுமதி: மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

பல்கலைக்கழக அனுமதி: மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

0

பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பதிவு தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

மாணவர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் இன்று (06) முதல் ஆகஸ்ட் 14-ஆம் திகதி வரை இடம்பெறும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், சாதாரண அனுமதியின் கீழ் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பதிவு தற்போது ஆரம்பமாகியுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு 

இந்த நடவடிக்கை எதிர்வரும் 14 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கான மேன்முறையீடுகள் ஓகஸ்ட் 21 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

மேலதிக விபரங்களுக்கு https://www.ugc.ac.lk/ என்ற இணையத்தளத்திற்கு பிரவேசிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்த வாரம் 2025/2026 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக மாணவர் அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டிருந்தது.

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் இந்த வெட்டுப்புள்ளிகள் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/registrations-for-uni-admissions-to-begin-1785993607

NO COMMENTS

Exit mobile version