அமைச்சரவையில் இருந்து நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவை நீக்குமாறு ரணில் விக்ரமசிங்கவிடம் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி மீண்டும் கோரிக்கை
விடுத்துள்ளது.
எதிரணி அரசியல் நடத்துகின்றோம் எனக் கூறும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன்
இணைந்து செயற்படுவதாலும், அக்கட்சியில் பதவியை ஏற்றதாலும் அவரை அமைச்சரவையில்
இருந்து நீக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
சிறிலங்கா அதிபர் தேர்தலில் ரணிலுக்கான ஆதரவு
மொட்டுக் கட்சி விடுத்துள்ள கோரிக்கை
விஜயதாஸவுக்குப் பதிலாக அமைச்சரவைக்குள் தம்மிக்க பெரேராவை உள்வாங்குமாறும்
வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது எனத் தெரியவருகின்றது.
இந்தக் கோரிக்கையை ஏற்று ரணில் அமைச்சரவையை மறுசீரமைத்தால் நீதி அமைச்சு
பதவி சுசில் பிரேமஜயந்தவுக்கும், கல்வி அமைச்சு தம்மிக்க பெரேராவுக்கும்
வழங்கபடக்கூடும் என அறியமுடிகின்றது.
மைத்திரியின் சர்ச்சைக்குரிய கருத்து! ரகசியத்தை அம்பலப்படுத்திய டிரான் அலஸ்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |