Home உலகம் யுத்த அச்சுறுத்தல்: 60,000 படைவீரர்களை தேடும் ஜேர்மன்

யுத்த அச்சுறுத்தல்: 60,000 படைவீரர்களை தேடும் ஜேர்மன்

0

ஜேர்மன் இராணுவத்திற்கு 60,000 புதிய படைவீரர்கள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த விடயத்தை அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

நாட்டின் பாதுகாப்பு மற்றும் நேட்டோ பாதுகாப்பு இலக்குகளை பூர்த்தி செய்ய இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புதிய படைவீரர்கள்

இதனடிப்படையில், ஜேர்மனியின் நிலையான இராணுவத்தில் 50,000 முதல் 60,000 வரையிலான புதிய படைவீரர்கள் தேவைப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் மேற்கொண்டதையடுத்து, நேட்டோ தனது கிழக்கு எல்லைகளில் பாதுகாப்பை வலுப்படுத்தி வருகின்றது.

இராணுவ சேவை 

இதனையடுத்து, ஜேர்மனியும் தனது பாதுகாப்பு தந்திரங்களை மீளாய்வு செய்து வருகின்றது.

2011 ஆம் ஆண்டு வரை ஜேர்மனியில் கட்டாய இராணுவ சேவை இருந்த நிலையில் பின்னர் ரத்து செய்யப்பட்டது.

தற்போது அதனை மீண்டும் கொண்டு வர வாய்ப்பு இருப்பதாகவும், அதற்கான திட்டமிடல்களில் இது ஒன்று எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version