Home இலங்கை சமூகம் ரணில் குறித்து கொழும்பு வைத்தியசாலையின் அறிவிப்பு

ரணில் குறித்து கொழும்பு வைத்தியசாலையின் அறிவிப்பு

0

வைத்தியாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறித்து கொழும்பு தேசிய வைத்தியசாலை முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

அதன்போது, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அவரைப் பார்வையிடுவதை அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் மட்டுப்படுத்துமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை தென்னிலங்கை ஊடகமொன்றின் ஊடாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் ருக்ஷான் பெல்ல வெளியிட்டுள்ளார்.

கடுமையான ஓய்வு

இந்த நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ரணிலுக்கு மூன்று நாட்களுக்கு கடுமையான ஓய்வு வழங்க வைத்தியர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

இவ்வாறு ஓய்வு வழங்காது சிகிச்சை அளிக்கப்பட்டால் மாரடைப்பு, சிறுநீரகப் பிரச்சினைகள் மற்றும் பிற சிக்கல்கள் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

https://www.youtube.com/embed/IXq1Vxzkyuc

NO COMMENTS

Exit mobile version