Home இலங்கை பொருளாதாரம் இலங்கை மசாலாப் பொருட்களுக்கான வரி தொடர்பில் ட்ரம்பிடம் கோரிக்கை

இலங்கை மசாலாப் பொருட்களுக்கான வரி தொடர்பில் ட்ரம்பிடம் கோரிக்கை

0

இலங்கை உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மசாலாப் பொருட்களுக்கு வரிச் சலுகை வழங்குமாறு அமெரிக்காவில் உள்ள மசாலாப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 சதவீத வரியை விதிப்பதாக அறிவித்தார். 

இதன் பின்னர் அந்த வரிகளை விதிப்பதை 90 நாட்களுக்கு ஒத்திவைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது. 

வரிச்சலுகை 

இருப்பினும், இலங்கை உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகளைக் குறைக்குமாறு மசாலா இறக்குமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், இலங்கையின் இலவங்கப்பட்டை உள்ளிட்ட பொருட்களில் 15 சதவீதம் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

அத்துடன், இலங்கையின் றப்பர் சார்ந்த பொருட்களில் 33 சதவீதமும், தேங்காய் சார்ந்த பொருட்களில் 18 சதவீதமும் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

NO COMMENTS

Exit mobile version