Home இலங்கை குற்றம் யாழில் காணாமல் போன மோட்டார் சைக்கிள் மீட்பு: ஒருவர் கைது

யாழில் காணாமல் போன மோட்டார் சைக்கிள் மீட்பு: ஒருவர் கைது

0

யாழ்ப்பாணம்(Jaffna) – சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை கிழக்கு பகுதியில் காணாமல் போன மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை கிழக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று
காணாமல் போயுள்ளது.

இதையடுத்து, சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ் நடவடிக்கை

இந்நிலையில், விரைந்து செயற்பட்ட சாவகச்சேரி பொலிஸ் விசேட குற்றத்தடுப்பு
பிரிவினர், மோட்டார் சைக்கிள் காணாமல் போன பகுதியில் இருந்து சுமார் இரண்டு
கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ள அல்லாரை என்ற இடத்தில் இருந்து மோட்டார்
சைக்கிளை மீட்டுள்ளனர்.

அத்துடன், மோட்டார் சைக்கிளை திருடிய சந்தேகநபரையும் கைது
செய்துள்ளனர்.

மேலும், சந்தேக நபரை நேற்றையதினம்(29) அவரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை, 14
நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

Source: https://tamilwin.com/article/rescue-of-missing-motorcycle-in-jaffna-1719700362

NO COMMENTS

Exit mobile version