Home இலங்கை அரசியல் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பொதுச்சபையில் டிரான் அலஸுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்!

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பொதுச்சபையில் டிரான் அலஸுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்!

0

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பொதுச்சபையில் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு (Tiran Alles) எதிராக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குற்றவாளிகளை ஒழிப்பது பாவம் இல்லையென புதிதாக நியமிக்கப்பட்ட காவல்துறை ஆட்சேர்ப்பாளர்களிடம் அவர் கூறியதை கண்டித்தே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த தகவலை இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன (Kaushalya Nawaratne) குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு கிடைத்த ஒப்பந்த வரைவு

குற்றச் செயல்களை ஒழிப்பது

மேல் மற்றும் தென் மாகாணங்களில் குற்றச் செயல்களை ஒழிப்பதற்கான முதலாவது உந்துருளி (மோட்டார் சைக்கிள்) பிரிவின் விசேட பயிற்சி பெற்ற அதிகாரிகளின் அணிவகுப்பில் அமைச்சர் கடந்த வியாழன் அன்று பங்கேற்றார்.

இதன்போது கொலைகள், போதைப்பொருள் விற்பனை மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்றவற்றில் ஈடுபடுபவர்களை ஒழிப்பது பாவம் அல்ல என்று அமைச்சர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

தாயும்,மகளும் நடத்திவந்த விபசார விடுதி முற்றுகை!

சட்டத்தரணிகள் சங்கம்

இந்நிலையில் அமைச்சர் பதவி விலகாவிட்டால் பொதுப் பாதுகாப்பு அமைச்சு பதவியில் இருந்து அவரை நீக்க அதிபர் நடவடிக்கை எடுக்கவேண்டுமென சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளதாக நவரத்ன குறிப்பிட்டுள்ளார்.

அதிபர் அமைச்சர் பதவியில் இருந்து அவரை நீக்காவிட்டால் உள்ளூர் மற்றும் சர்வதேச சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக சட்டத்தரணிகள் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.

சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததை அடுத்து அமைச்சரின் இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளதாக கூறியுள்ள நவரத்ன கடந்த சில மாதங்களில் இலங்கை காவல்துறையினரும் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதை சுட்டிக்காட்டியுள்ளார்.

அழகிப்போட்டியில் வென்று அசத்திய 60 வயது பெண்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

NO COMMENTS

Exit mobile version